பொதுமக்கள் பொறுப்பற்று நடந்துகொண்டால் மோசமான என்ற நிலையிலிருந்து மிகமோசமான நிலைக்கு செல்ல நேரிடும் – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!

Monday, August 2nd, 2021

தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களில் தேவையற்ற இடநெரிசலை ஏற்படுத்தவேண்டாம் என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் பொதுமக்களிற்கு தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு போதுமான நேரம் உள்ளதால் நீண்ட வரிசையில் காத்திருப்பதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அஸ்டிரா ஜெனேகா இரண்டாவது டோஸினை பெறுவதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர் என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் முதலாவது டோஸினை பெற்றவர்களிற்கு இரண்டாவது டோஸினை வழங்குவதற்கு போதியளவு தடுப்பூசி கிடைத்தமை நிம்மதியான விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.

தடுப்புபூசி வழங்கும் நிலையங்களில் பொதுமக்கள் பொறுப்புணர்வற்ற விதத்தில் நடந்துகொண்டால் நிலைமை மோசமானது என்ற நிலையிலிருந்து மிகமோசமானது என்ற நிலைக்கு செல்லலாம் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மேற்கு மாகாணத்தின் ஒவ்வொரு மருத்துவ அதிகாரி பிரிவையும் அடிப்படையாக வைத்து தடுப்பூசி நிலையங்களை அமைத்துள்ளோம், இதன் காரணமாக பொதுமக்கள் பொறுமையுடன் தங்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: