பொதுமக்கள் சூழ்நிலையை கருத்திற்கொள்ளாது செயற்பட்டால் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை சரியான முறையில் மேற்கொள்வதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் கொவிட் – 19 கட்டுப்படுத்தும் நிர்வாக குழு கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்திற் கொள்ளாது செயற்பட்டால் இவ்வாறு பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதில் எந்தவித அர்த்தமும் கிடையாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொக்குவில் நேதாஜி சன சமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு...
இலங்கையில் மீன் ஏற்றுமதி அதிகரிப்பு!
கொரோனா வைரஸ் எதிரொலி: இதுவரை இலங்கையில் 900 பில்லியன் ரூபா நட்டம்!
|
|