பொதுமக்களுக்கு சேவை செய்யும் போது பொறுப்புடன் செயற்பட வேண்டும் – அரச ஊழியர்களுகளுக்கு அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவுறுத்து!

அரச ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பொது மக்களுக்கு சேவை செய்யும் போது மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஊடகத்துறை அமைச்சரான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அரச துறை ஊழியர்கள் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அரசியல்வாதிகள் மற்றும் அரச துறை ஊழியர்களே பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு கருத்தில் எந்தத் தவறும் இல்லை.
இரண்டு தரப்பினரும் எங்கே தவறு செய்தார்கள் என கேள்வி எழுப்பிய அவர், இது தொடர்பாக அரசாங்கத்தால் பகுப்பாய்வு நடத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
பல அரச நிறுவனங்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டு, ஒரு இலக்கை நோக்கி கவனத்தை செலுத்தத் தவறியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|