பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பில் 14ஆம் திகதிக்கு முன்னதாக அறிவிக்கப்பட வாய்ப்பு!

ஒத்திவைக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னதாக இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் சுகாதார தரப்பினர் மற்றும் ஏனைய தரப்புக்களுடன் கொரோனா வைரஸ் தொற்று பரவுகை குறித்து அறிக்கைகள் பெற்றுக்கொள்வதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த அறிக்கையின் பிரகாரமே விருப்பு வாக்கு எண் பற்றிய அறிவித்தல் வர்த்தமானியில் அறிவிக்கப்பட உள்ளது.
கடந்த 2ஆம் திகதி முற்பகல் நடைபெற்ற கட்சி செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தல் நடத்துவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. ஆனாலும் தற்போது நாட்டு நிலைமைகள் வழமைக்கு திரும்பும் நிலையில் உள்ளமையால் தேர்தலை நடத்துவது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
43 இந்திய மீனவர்கள் யாழில் விடுதலை!
பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு பிரதமருக்கு குறியீட்டு ரீதியில் பொப்பி மலர் அணிவிப்பு!
மீண்டும் பொது போக்குவரத்து சேவை ஆரம்பம் - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
|
|