பேருந்து முன்னுரிமை ஒழுங்கை வேலைத்திட்டம் வெற்றி – அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க!

Friday, August 18th, 2017

காலி வீதியில் ஆரம்பிக்கப்பட்ட பேருந்து முன்னுரிமை ஒழுங்கை வேலைத்திட்டத்தின் முதற் கட்டம் வெற்றி பெற்றுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இந்த வேவைத்திட்டம் வெற்றியடைந்திருப்பதாக தெரிவித்த அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மொறட்டுவ சிலுவைச் சந்தியில் இருந்து கட்டுபெத்த வரையிலும், வெள்ளவத்தை சவோஸ் அரங்கில் இருந்து பம்பலப்பிட்டி வரையிலும் பஸ் முன்னுரிமை ஒழுங்கை வேலைத்திட்டம் அமுலாகும் என்று கூறினார்.இந்த வேலைத் திட்டத்தின் இரண்டாவது கட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்படும்.

Related posts: