பேருந்து போக்குவரத்தை மேற்கொள்ள அனுமதி – போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர!

Wednesday, May 20th, 2020

அனர்த்த வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தவிர ஏனைய இடங்களில், மாகாணங்களுக்கிடையிலான பேருந்து போக்குவரத்தை மேற்கொள்ள இன்றுமுதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனை பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு வழங்கியுள்ள பரிந்துரைகளுக்கமைய இன்றுமுதல்  பேருந்து சேவைகள் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பொது போக்குவரத்தானது இன்னும் அத்தியாவசிய அரச மற்றும் தனியார் சேவையாளர்களுக்காக மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றுமுதல் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நடவடிக்கைகள் ஆரம்பமாவதாக அதன் ஆணையாளர் சுமித் அலகக்கோன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி கைவிடப்பட்ட இந்த சேவையானது ஒரு நாள் சேவையை தவிர ஏனைய சேவைகளை இன்றுமுதல் வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே சேவையாளர்கள் கடமைக்கு சமூகமளிப்பதன் காரணமாக தொலைபேசி ஊடாக அழைப்பினை மேற்கொண்டு நேரம் மற்றும் திகதி ஆகியவற்றை முற்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி 070 63 54 108 என்ற இலக்கத்துடன் தொடர்புக் கொண்டு முற்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இன்றுமுதல் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹேர நிலையங்களிலிருந்து பொதுமக்கள் சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும என அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் அலகக்கோன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: