பேருந்து தரிப்பிடத்தில் ஆணும் பெண்ணும் ஒன்றாக அமரத் தடை!

Monday, April 11th, 2016
நீர்கொழும்பு பேருந்து தரிப்பிடத்தில் ஆணும் பெண்ணும் ஜோடியாக அமர்வதற்கு பாதுகாப்பு அதிகாரிகளால் தடை செய்யப்பட்டுள்ளது.

பேருந்து தரிப்பிடத்தில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஜோடிகள் ஒன்றாக அமர்ந்திருக்க முடியாது என்று பெண் பாதுகாப்பு பணியாளர்கள் எச்சரிக்கும் காட்சி ஒன்றும் இலங்கையின் இணையத்தளம் ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே இவ்வாறான தடை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கொண்டு வரப்பட்டபோது அதற்கு பாரிய எதிர்ப்பு வெளிக்காட்டப்பட்டது. இதனையடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: