பெற்றோல் விலை அதிகரிப்பின் எதிரொலி – முச்சக்கரவண்டி கட்டணமும் அதிகரிப்பு!

பெற்றோலின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, மீற்றர் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான ஆரம்ப கட்டணத்தை 10 ரூபாவால் அதிகரிக்க சுயதொழிலாளர்களின் தேசிய முச்சக்கர வண்டி சங்கம் தீர்மானித்துள்ளது.
தற்போது, முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் 50 ரூபாவாக அறவிடப்பட்டு வருகிறது. இதன்படி புதிய கட்டணம் 60 ரூபாவாக அதிகரிக்கும் என்று, அந்த சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஒன்றிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிற்துறை சங்கத்தின் செயலாளர் இந்த தீர்மானத்தை நிராகரித்துள்ளார்.
அதேபோன்று, அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கமும், கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதில்லை என்று அறிவித்துள்ளது.
Related posts:
ஆயுதப் பாசறையில் ஒன்றாக இருந்த நாம் மீண்டும் அரசியல் பாசறையில் ஒன்றிணைந்துள்ளோம் - கன்னி உரையில் ஜெ...
ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகளின் தூதுவர்களுடன் நிதி அமைச்சர் பசில் விசேட சந்திப்பு - சலுகை முறையில் எரிப...
சட்ட விரோதமாக இந்தியா செல்ல முற்பட்ட 7 பேர் மன்னாரில் கைது !
|
|