பெற்றோல் நிலையங்களுக்கு மீண்டும் பூட்டு?

Thursday, May 18th, 2017

தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால், பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட போவதாக பெற்றோலிய தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 22ஆம் திகதிக்கு பின்னர், முன்னறிவித்தல் இன்றி பனிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடபோவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்திருந்ததாகவும், அரசாங்கத்தின் தலையீட்டால் அது இடைநிறுத்தப்பட்டதாகவும் பெற்றோலிய தொழிற்சங்கம் கூறியுள்ளது.

இதேவேளை, திருகோணமலை எண்ணெய் குதந்களை இந்தியாவுக்கு வழங்கும் ஒப்பந்தத்திற்கு பெற்றோலிய தொழிற்சங்கம் எதிரிப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், தொழிற்சங்க போராட்டம் காரணமாக மீண்டும் பெற்றோல் நிலையங்கள் பூட்டப்படுமா ? என்ற சந்தேகம் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: