“பெரும் போகத்தை வெற்றி கொள்வோம்” – வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

Monday, September 13th, 2021

“பெரும்போகத்தை வெற்றி கொள்வோம்” எனும் வேலைத் திட்டத்தின் கீழ் விசேட விவசாய ஊக்குவிப்பு வாரத்தினை முன்னிட்டு, அம்பாறை மாவட்ட மாகாண இடை பிரதேசங்களில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

விவசாயத் திணைக்களத்தின கீழ் ,மண் பரிசோதனை நெற் செய்கையில் உற்பத்தியை உயர்த்தும் வேலைத்திட்டம், அரச மாணிய உதவிகளும். விதைகள் மற்றும் நடுகைப் பொருட்களைப் பெறுதல் நெற்செய்கையில் பண்டிச்சம்பா மற்றும் கிலுகிலுப்பான் போன்ற களைகளைக் கட்டுப்படுத்தல் நெற் செய்கையில் அறக்கொட்டிகளின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தல் போன்ற வேலைத் திட்டங்கள் இதன் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று மேற்கு விவசாய விரிவாக்கல் சேவை நிலையப் பொறுப்பதிகாரி. நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான ஆலோசனைகளை அக்கரைப்பற்று மேற்கு விவசாய விரிவாக்கல் காரியத்தில் தொழினுட்ப உத்தியோகத்தர்களிடம் பெற்றுக் கொள்ள முடியும் என்றுமு; அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: