பெரியபுலவு மகா வித்தியாலய சம்பவம்: ஆசிரியர்களை பணிநீக்கம் செய்து கடுமையாக தண்டிக்கவேண்டும் என பெற்றோர் கோரிக்கை!

யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் மாணவிகள் சிலருடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்த ஆசிரியர் தொடர்பாக வலய கல்வி பணிமனையும் கல்வித்துறையினரும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என கோரி பெற்றோர்கள் இன்று பாடசாலையில் போராட்டம் நடத்தியிருந்தனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த ஆசிரியர் ஏழாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவிகள் சிலர் மீது பாலியல் சேட்டையில் ஈடுபட்டதாக ஆர்ப்பட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக அதே பாடசாலையை சேர்ந்த பிறிதொரு ஆசிரியராலும், குறித்த மாணவிகளின் பெற்றோர்களாலும் அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்த போதும் அதிபர் இச் சம்பவத்தை மூடி மறைக்க முட்பட்டுள்ளார்.
இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக கல்விப் பணிப்பாளர்களும் நீதிமன்றமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும் அப் பாடசாலையின் மாணவர்களும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் இன்றைய தினம் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் மேற்கொண்ட ஆசிரியர்கள் மூவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்ததுடன் இவ்வாறான சம்பவங்கள் தற்போது அதிகரித்துவரவதனால் தமது பிள்ளைகளை பாதுகாத்துக்கொள்ளமுடியாதுள்ளதாகவும் கவலை தெரிவித்த பெற்றோர் குறித்த செயலை செய்த ஆசிரியர்களை உடனடியாக அரச தொழிலிலிருந்த அகற்றவேண்டும் எனவும் ஆதங்கத்தடன் எமது செய்தியாளரிடம் தெரிவித்தள்ளனர்.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன் வரணிப்பகுதியில் உள்ள ஒர் பாடசாலையிலும் இது போன்றதொரு சம்பவம் இடம்பெற்று, அது தொடர்பில் அப் பாடசாலையின் அதிபர் குறித்த ஆசிரியர் உட்பட ஜவர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்க்கதாகும்.
Related posts:
|
|