பெண் ஒருவரின் கடனட்டை குறியீட்டு இலக்கத்தை பயன்படுத்தி மோசடி – நீதிமன்று அதிரடி உத்தரவு!

Monday, July 9th, 2018

யாழ்ப்பாணத்தில் இணைய வழி மோசடிகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இணைய வழி குறித்து கடந்த மாதம் மாத்திரம் இரண்டு முறைப்படுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். கடனட்டை ஊடாக இணைய வழியில் மோசடி ஈடுபட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.

யாழில் உள்ள உறவு முறையான பெண் ஒருவரின் கடனட்டை குறியீட்டு இலக்கத்தை பயன்படுத்தி, இணையம் மூலம் மின்னியல் சாதனங்களை சந்தேகநபர் கொள்வனவு செய்துள்ளார்.

குறித்த நபரின் செயற்பாட்டால் கடனட்டை வங்கிக் கணக்கில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நிலுவையை செலுத்தவேண்டியுள்ளது என வங்கியால் அந்தப் பெண்ணுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த பெண், வங்கிக்குச் சென்று ஆராய்ந்த போது, இணைய வழி ஊடாக கொடுக்கல் வாங்கல் செய்யப்பட்டமை அறியக் கிடைத்ததுள்ளதுடன், பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். இந்நிலையில், எதிர்வரும் 13ம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related posts: