‘பெண்டோரா’ சம்பவத்துடன் தொடர்புடைய ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை!

Saturday, October 16th, 2021

சர்ச்சைக்குரிய பெண்டோரா ஆவணங்கள் தொடர்பில், ஆய்வுகளை மேற்கொண்டு, அடுத்தக்கட்ட விசாரணைகளை மேற்கொள்வதாக கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய ஆவணங்களை ஆய்வுக்கும் உட்படுத்தும் நடவடிக்கைகள், எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படும் என அதன் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேநேரம், பல்வேறு தரப்பினர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பிலும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமரன் நடேசன், கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் நேற்று முன்னிலையானார்.

முற்பகல் 11 மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலையான அவர், 2 மணிநேரத்தின் பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.

திருக்குமரன் நடேசன், பெண்டோரா ஆவணங்கள் தொடர்பில், கடந்த 8 ஆம் திகதி, முதல் முறையாகக் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி, 3 மணிநேரம் வாக்குமூலம் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts:

சுகாதார விதிமுறைகளை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு நிதி ஒதுக்கீட செய்யவில்லை - இலங்கை ஆசிரியர் சங்கம...
உலகில் சிறந்த முதல் 500 பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தும் இடம்பிடித்தது பேராதனை பல்கலைக்கழகம்!
சிறுவர்களை சாட்சியாளர்களாக நீதிமன்றுக்கு அழைப்பதை தவிர்க்க விசேட திட்டம் - சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அ...