பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பான சட்டங்களை கடுமையாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானம்!

Thursday, January 25th, 2024

குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பான சட்டங்களை கடுமையாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, தற்போதைய சட்டத்தில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், குறித்த சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Related posts: