பெட் ஸ்கேன் இயந்திரத்தை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு பெட் ஸ்கேன் (PET scan) இயந்திரத்தை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களை பரிசோதனை செய்ய பெட் ஸ்கேன் இயந்திரம் ஒன்று இல்லை என்பதை இனம்கண்ட எம்.எஸ்.எச். மொஹமட் தலைமையிலான கதீஜா Foundation பெட் ஸ்கேன் இயந்திரம் ஒன்றைக் கொள்வனவு செய்ய நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அதற்கமைய ஊடகங்களின் உதவியுடன் பொதுமக்களிடம் சுமார் 20 கோடி ரூபாய் பணம் பெட் ஸ்கேன் இயந்திரம் கொள்வனவுக்கு சேகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் மாற்றம்!
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 120 ஆக அதிகரிப்பு – இலங்கை சுகாதார பிரிவு அறிவிப்பு!
பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள - இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறு...
|
|