பூநகரி,பச்சிலைப்பள்ளி, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்களுக்கு இடமாற்றம்!

Saturday, December 26th, 2020

பூநகரி, பச்சிலைப்பள்ளி மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்களுக்கு இடமாறுதல் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பூநகரி பிரதேச செயலாளராக செயற்பட்டு வரும் எஸ்.கிருஸ்ணேந்திரனை, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராகவும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த பரமோதயான் ஜெயராணியை ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராகவும்  ஒட்டுசுட்டான பிரதேச செயலகத்திற்கு முதலாவது பிரதேச செயலாளராக பொறுப்பேற்று, கடமையாற்றி வரும் த.அகிலன் பூநகரி பிரதேச செயலாளராகவும் இடமாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

Related posts: