நிதி சேகரித்த 13 பேருக்கு எதிராக விசாரணை – சுவிட்சர்லாந்தின் பிராந்திய நீதிமன்றம்!

Tuesday, January 9th, 2018

புலிகளுக்கு நிதி சேகரித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தொடர்பான தீர்ப்பை,எதிர்வரும் மார்ச் மாதமளவில் சுவிட்சர்லாந்தின் பிராந்திய நீதிமன்றம் வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த குற்றச்சாட்டின் கீழ் 13 பேர் தொடர்பான விசாரணைகள் சுவிட்சர்லாந்தின் பெலின்சோனா நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டை நிராகரித்தனர்.

மேலும் புலிகள் இயக்கம் சுவிட்சர்லாந்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பில்லை என்பதால், அதற்கு நிதியளிப்பது குற்றமில்லை என்றும் வாதிடப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் மார்ச் மாத நடுப் பகுதியில் வழங்க நீதிமன்றம் எதிர்பார்த்துள்ளது.

Related posts: