புலம்பெயர் என்ற சொல்லை இலங்கை அங்கீகரிக்கவில்லை – அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Tuesday, March 30th, 2021

இலங்கையிலிருந்து எவரும் வெளியேற்றப்படவில்லை. எனவே புலம்பெயர்ந்தோர் என யாரும் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில, புலம்பெயர் என்ற சொல்லை இலங்கை அங்கீகரிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வெளிநாட்டவர்களுடன் நெருக்கமான உறவுகளை அரசாங்கம் பேணும் என்றாலும் புலிகளின் சித்தாத்தங்களை அல்லது பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் அனைத்து குழுக்களையும் அரசாங்கம் தடை செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லங்கையில் புலிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அரசியலமைப்பின் கீழ் பிரிவினைவாதம் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சில அமைப்புகள் உட்பட பல தமிழ் புலம்பெயர் குழுக்களை அரசாங்கம் 2012 ஆம் ஆண்டின் ஐ.நா. ஒழுங்குமுறை எண் 1 (4) இன் கீழ் தடை செய்துள்ளது.

ஆனாலும் கடந்த 2014 ஆம் ஆண்டு சில குழுக்கள் தடை செய்யப்பட்டபோதும் அவை 2015 இல் அரசாங்கத்தால் பட்டியலிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: