புலமைப் பரிசில் பரீட்சையில் வடமாகாணத்தில் முதலிடம் பெற்றுப் யாழ் மண்ணிற்குப் பெருமை சேர்த்த   மாணவி!

Thursday, October 5th, 2017
தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று(04) வெளியாகியுள்ள நிலையில் யாழ். புனித ஜோன் போஸ்கோ வித்தியாலய மாணவி உதயகுமார் அனந்திகா வடமாகாணத்தில் முதலிடம் பெற்றுப் பெற்றோருக்கும், பாடசாலைச் சமூகத்திற்கும், சமூகத்திற்கும் பெருமை தேடித்தந்துள்ளார்.
யாழ்.தெல்லிப்பழைப் பன்னாலைப் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவி கடந்த கால யுத்த சூழ்நிலைகள் காரணமாக இடம்பெயர்ந்து கோண்டாவில் பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வருகிறார்.  மாணவியின் தாயார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட விரிவுரையாளராகவுள்ளதுடன்,  தந்தையார் திறந்த பல்கலைக்கழக  பொறியியலாளராகவும் கடமையாற்றுகின்றார்.
நான் இந்த வருடம் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி 194 புள்ளிகளைப் பெற்று வடமாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளேன். தனியார் கல்வி நிலையங்கள் எவற்றிற்கும் செல்லாமல் வகுப்பாசிரியரின் வழிகாட்டலில் தான் இவ்வாறான சாதனையைப் படைத்துள்ளேன்.
எனக்குக் கல்வி கற்பித்த ஆசிரியையான மீனாம்பிகை  பரமேஸ்வரன் என் போன்ற மாணவர்களுக்குச் சிறந்த முன்மாதிரியாக விளங்குவதால் அவர் போன்று நானுமொரு ஆசிரியராகவே விரும்புகின்றேன் என்றார்.
snapshot714

Related posts: