புற்றுநோய்க்கான மூன்றாவது மருந்த இலங்கையிலும் விரைவில் கிடைக்கும் – அமைச்சர் ராஜித சேனராத்ன!

Thursday, May 11th, 2017

புற்றுநோய்க்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 3ஆவது மருந்தை இரங்கைக்கு எடுத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாற தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஆளணி வள அபிவிருத்தி மீது அரசு சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் தாதியர் பீடம் ஆரம்பிக்கப்படும். மருந்த பரிசோதனைக்கான சீன அரசின் உதவியோடு தர ஆய்வு கூடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. மருந்து வகைகளை வர்த்தக நாமங்களை கொண்டு விற்பனை செய்வதற்கு பதிலாக மருந்தின் மூலப் பெயருடன் விற்பனை செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. விரைவில் 3ஆவது புற்றுநோய் மருந்தை தருவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது நாட்டில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மருந்து வகைகளை விட விலை குறைந்ததாகும். இதற்கு தேவையான ஆலோசனைகள் தேசிய ஓளடத அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளன.

கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகள் தனியார் மயப்படுத்தப்படும் என்று சிலர் குற்றச்சாட்டுக்களை மன்வைத்துள்ளனர். ஆனால் இந்த 2 துறைகளுக்கும் அரசு அதிகூடியளவு நிதியை ஒதுக்கியுள்ளது.

Related posts: