புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் எதுவும் நாட்டில் தற்போது இல்லை – வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, May 19th, 2021

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் உள்ளதாக கண்டறியப்பட்ட  தேங்காய் எண்ணெய் அனைத்தும் இலங்கையிலிருந்து மீள ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் எதுவும் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை என்பதை சுங்கப் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: