புரேவி சூறாவளியால் கொடிகாமத்தில் பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில்!

புரேவி சூறாவளி இலங்கையை கடக்கும் போது பெய்த கடும் மழை காரணமாக கொடிகாமத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன்படி கொடிகாமம், கொடிகாமம் மத்தி, தவசிகுளம், வெள்ளாம்போக்கட்டி, அல்லாரை உள்ளிட்ட கிராமங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
தவசிகுளம் உள்ளிட்ட பகுதியில் வெள்ளம் காணப்படுகின்ற இடங்களில் வசிக்கும் குறிப்பிட்ட அளவிலான குடும்பங்கள் இடைத்தங்கல் நிலையங்களிலும், ஏனையோர் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர். மக்களை வெளியேற்ற இராணுவம் உதவிபுரிந்தது.
வெள்ளாம்போக்கட்டி மற்றும் அல்லாரை பகுதிகளில் வெள்ள நிலைமைக்கு மத்தியிலும் பாதிக்கப்பட்ட சில குடும்பங்கள் தத்தமது வீடுகளிலேயே வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டெங்கு ஒழிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை!
கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மேல் மாகாணத்தை முடக்குங்கள் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அரச...
டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டு வைத்தார் பாரதப் பிரலதமர மோடி!
|
|