புதிய முறைமை அமுலாக்கப்படும் வரை நலன்புரி கொடுப்பனவுகளில் மாற்றம் இல்லை – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அறிவிப்பு!

Saturday, July 29th, 2023

புதிய முறைமை அமுலாக்கப்படும் வரையில், தற்போது நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரி கொடுப்பனவு முறைமைகளில் மாற்றம் ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் கொண்டோர், சிரேஷ்ட பிரஜைகள், சிறுநீரக நோயாளர்கள் உட்பட ஏனைய நோய் நிலைமைகளுக்கு உள்ளானவர்களுக்காக, தற்போது வழங்கப்படுகின்ற நலன்புரி கொடுப்பனவுகளில் மாற்றமில்லை எனவும் அவர்  ட்விட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பயனாளர்கள், எதிர்கால கொடுப்பனவு திட்டத்திற்காக, வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்து, அது குறித்து பிரதேச செயலகங்களுக்கு அறியப்படுத்துமாறும் அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, அஸ்வெசும வங்கிக் கணக்கைத் திறப்பதற்காக, ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து மக்கள் வங்கிக் கிளைகளும் இன்றையதினம் வழமைபோல திறந்திருக்கும் என, மாவட்ட செயலாளர் எச். ஜீ. சுமனசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவசியம் ஏற்படின், நாளைய தினமும் மக்கள் வங்கிக் கிளைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: