புதிய அரசியலமைப்பு வழிநடத்தல் குழு இன்று கூடுகின்றது!

Tuesday, February 21st, 2017

இடைநிறுத்தப்பட்டிருந்த புதிய அரசியல் யாப்பு பணிகள் இன்றைய தினம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி அரசியலமைப்பிற்கான பிரதான வழிநடத்தல் குழு பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் இன்று கூடவுள்ளது.

புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கும் நோக்கில் முழு நாடாளுமன்றமும் அரசியலமைப்பு நிர்ணயச் சபையாக மாற்றப்பட்டது.

இதன்பிரகாரம் அரசியலமைப்பை தயாரிப்பதற்காக பிரதான வழிநடத்தல் குழு நிறுவப்பட்டதோடு அதன் கீழ் 6 உப குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.

புதிய அரசியலமைப்பினைத் தயாரிப்பதற்கான முதலாவது நிர்ணயச் சபை கடந்த வருடம் ஏப்ரல் 5ஆம் திகதி கூடியது.

அதுதொடக்கம் அரசியலமைப்பினை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வந்தன. உப குழு அறிக்கைகளும் அரசியலமை்பு நிர்ணயச் சபையில் சமர்பிக்கப்பட்டன. எனினும் இதற்கான விவாதம் இதுவரை இடம்பெறவில்லை.

அரசியலமைப்பினை தயாரிப்பதற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையும் இதுவரை சமர்பிக்கப்படவில்லை. இந்த நிலையில் வழிநடத்தல் குழுவின் நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

அரசியலமைப்பு தயாரிப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை தொடர்பாக நாடாளுமன்றத்திலும் சர்ச்சையான நிலைமை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் புதிய அரசியலமைப்பினை தயாரிக்கும் பணிகள் இன்றைய தினம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதோடு இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பிற்கான வழிநடத்தல் குழு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

sri-lanka-parliament-gov

Related posts:

பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் மக்களுக்காக புதிய விதிமுறைகள் அறிமுகம் - பதில் பொலிஸ் மா அதிப...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மாமியார் இராஜசுந்தரம் சுகுனேஸ்வரியின் பூதவுடல் தீயுடன் சங்கமம் !
நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புகளை கணக்கிடும் இலத்திரனியல் தவறு - இலத்திரனியல் அமைப்பு பரிசோதனைக்கு!

விதி மீறிய சாரதியின் விபத்தால் இறந்தவர் பேரில் ரூ.1.25 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!
மறு அறிவித்தல் வரை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து - போக்குவரத்து சபையின் பிர...
வரி நடைமுறை குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு தனி நீதிமன்றம் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பல...