புதிய அரசியலமைப்பு வரைவு ஜனவரியில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்?

Friday, December 9th, 2016

புதிய அரசியல் அமைப்பு குறித்த வரைவுத் திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற போது நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்…

அரசியல் அமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.ஐக்கிய இலங்கைக்குள் உச்ச அளவில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கக் கூடிய வகையில் அரசியல் அமைப்பு உருவாக்கப்படும்.

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள வரைவுத் திட்டம் இறுதியானதல்ல, இதில் திருத்தங்கள் செய்யப்பட முடியும். நாடாளுமன்றிற்கு பொறுப்புச் சொல்லக் கூடிய பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி செயற்படுவார்.

இதன் ஊடாக நாடாளுமன்றின் உன்னத தன்மை உறுதி செய்யப்படும்.எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது பயன்படுத்தி வரும் அதிகாரங்களில் மாற்றம் செய்யப்படாது.

விருப்பு வாக்கு முறையிலான தேர்தலை நிறுத்தி, விகிதாசார மற்றும் தொகுதிவாரி தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)