புகையிலைச் செய்கையை முற்றாக ஒழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் -அமைச்சர் ராஜித சேனாரத்ன!

Saturday, April 8th, 2017

பாடசாலைகளில் இருந்து 500 மீற்றர்களுக்கு அப்பால் சிகரெட்டக்களை விற்பனை செய்யவும், தனி சிகரெட்டுக்களை விற்பனை செய்வதை தடை செய்வதற்குமான இரண்டு பிரேரணைகள் அமைச்சரவையில் பிரேரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில்நேற்று உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார் –

வாய் புற்றுநோயினால் மாத்திரம் மூவாயிரம் பேர் மரணிக்கிறார்கள். புகையிலை பாவனையினால் ஏற்படும் புற்று நோயை தடுக்க அரசாங்கம் புற்று நோய்க்கு சிகிச்சை வழங்குவதற்காக அரசாங்கம் வருடாந்தம் 500 கோடி ரூபாவுக்கும் அதினமான தொகையை செலவிடுகிறது என்றும் அமைச்சர் ராஜித சேனரத்ன சுட்டிக்காட்டினார்.

2030ஆம் ஆண்டளவில் புகையிலைச் செய்கையை முற்றாக ஒழித்து மாற்று பயிர் செய்கைகளின் மீது கவனம் செலுத்துவது அரசாங்கத்தின் இலக்காகும். புகையில்லாத புகையிலை உற்பத்தியையும், அதன் விற்பனையையும் தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். பாக்கு பயன்பாடு பற்றி புதிய சட்ட ஒழுங்குகள் அமுல்படுத்தப்படவுள்ளது. என்றும் அமைச்சர் ராஜித சேனரத்ன கூறினார்.

Related posts: