புகைத்தல் 90சதவீதமளவு கட்டுப்பாட்டில் – தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி!

Wednesday, October 4th, 2017

குடாநாட்டின் சகல சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைப் பிரிவுகளிலும் புகைத்தல் பாவனையுள்ள போதும் தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவின் கீழ் மட்டும் 90 வீதம் கட்டுப்படுத்தியுள்ளோம் என்று சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

குடாநாட்டின் சிவில் நிலமை தொடர்பான கூட்டம் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் இது தொடர்பில் 36 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.எமது கடும் முயற்சியைப் பாராட்டி அரச தலைவரே நேரில் அழைத்து விருதும் வழங்கிக் கௌரவித்த போதும் அங்கு இடம் பெறும் மதுப்பாவனை தொடர்பான பிரச்சினைகளில் மதுவரித் திணைக்களம் ஒத்துழைப்பது கிடையாது. எமது இந்த நடவடிக்கைக்கு பிரதேச சபை பூரண ஒத்துழைப்பு நல்குகின்றது.

புகைத்தல் விதிமுறை மீறி விற்கும் விற்பனை நிலையத்தின் விற்பனை அனுமதிப்பத்திரத்தை நீக்கம் செய்யும் அதிகாரமே உள்ளூராட்சி மன்றங்களுக்கு உண்டு.யாழ்ப்பாணக் குடாநாட்டில் நகரப் பகுதியிலேயே அதிக புகைத்தல் பாவனையுள்ளது. உணவகங்களில் இதன் பாவனை பெருகியுள்ளது. அனைத்துத் தரப்பும் இது தொடர்பில் கரிசனை செலுத்தினால் மட்டுமே அதைக் கட்டுப்படுத்த முடியும் – என்றார்

Related posts: