புகைத்தல் மற்றும் வெற்றிலை மெல்ல தடை!

Saturday, January 26th, 2019

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட அனைத்துப் பொதுச் சந்தைகளின் உட்பகுதிகளில் புகைத்தல், வெற்றிலை மெல்லுதல் மற்றும் மதுபானம் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக கரைதுறைப்பற்று பிரதேச சபை அறிவித்துள்ளது.

பொதுச்சந்தைகளை ஒழுங்குபடுத்துவதற்காகவும் பொதுமக்களின் நலன்கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த ஒழுங்குபடுத்தல் புகைப்பொருள் மற்றும் வெற்றிலை விற்பனையாளர்களின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கரைதுறைப்பற்று பிரதேச சபை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Related posts: