பீ.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை சுகாதார பிரிவினரிடம் கையளிக்காவிட்டால் யாழ்.நகரில் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதிக்கப்படமாட்டாது!

Monday, March 29th, 2021

பீ.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு முடிவு அறிக்கையை சுகாதார பிரிவினரிடம் கையளிக்காவிட்டால் யாழ்.நகரில் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதிக்கப்படமாட்டாது என இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில் –

யாழ்.நகரின் ஒரு பகுதி கடந்த வெள்ளிக்கிழமை முதல் 10 நாட்களுக்கு முடக்கப்பட்டிருந்கின்றது. இதனையடுத்து அவ்வாறு முடக்கப்பட்டிருக்கும் பகுதி வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு முன்னர் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

அதன் முடிவு அறிக்கைகள் சுகாதார பிரிவிடம் கையளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், அதன் பின்பே வர்த்தக நிலையங்களை திறப்பதற்கான ஒப்புதல் வழங்கப்படும் எனவும் இராணுவத்தளபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: