பிளாஸ்டிக் போத்தல்களை மீள்சுழற்சி செய்வதற்கான மாற்று திட்டத்தை முன்மொழியுங்கள் – துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்து!

Tuesday, June 15th, 2021

750 மில்லி லீட்டர் பிளாஸ்டிக் போத்தல்களை மீள்சுழற்சி செய்வதற்கான மாற்று திட்டத்தை முன்மொழியுமாறு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கும் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கும் அறிவித்துள்ளார்.

மாற்று பொதியிடலுக்கான செலவு மற்றும் ஆயுள் காலம் தொடர்பில் கவனம் செலுத்தும் போது பிளாஸ்டிக் போத்தல்களைத் தடை செய்வது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்று மத்திய சுற்றாடல் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அதனடிப்படையில் 750 மில்லி லீட்டர் போத்தலை வாங்கும் அந்த போத்தலின மீள்சுழற்சிக்காக ஒரு தொகை பணம் வைப்பீடு ரீதியில் வைத்துக்கொள்ள ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்று போத்தலை மீள ஒப்படைப்பதன் மூலம் வைப்புத் தொகையை திருப்பிப்பெற முடியும் என்றும், வெற்று போத்தலை அப்புறப்படுத்தினாலும், மற்றொரு நபர் அத்தகைய போத்தல்களை சேகரித்து ஒப்படைப்பதன் மூலம் கூடுதல் வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது..

அது தொடர்பில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள வைப்புத்தொகை 10 ரூபா தொடர்பான ஆலோசனைக்கு நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்துள்ளன. இந்நிலையிலேயே அமைச்சர் மீள்சுழற்சி செய்வதற்கான மாற்று திட்டத்தை முன்மொழியுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையை கட்டுப்படுத்துவதற்காக சுற்றாடல் அமைச்சு பல உற்பத்திகளை கடந்த காலங்களில் தடை செய்தது. அதேபோல் மேலும் பல உற்பத்திகளை எதிர்காலத்தில் தடை செய்ய எதிர்பார்த்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: