பிரிவினைவாதத்தை தோற்கடித்த தலைவர்கள் ஆட்சியில் இருக்கும்போது நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எந்தவொரு முடிவிற்கும் இடமிருக்கப்போவதில்லை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

30 ஆண்டுகால யுத்தத்தின் பின்னர் பிரிவினைவாதத்தை தோற்கடித்த தலைவர்கள் ஆட்சியில் இருக்கும்போது நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எந்தவொரு முடிவிற்கும் இடமிருக்கப் பொவதில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தற்போதைய அரசாங்கம் நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை சிறிதும் பாதிக்க அனுமதிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –
ஆட்சிக்கு வரும் ஒரு அரசாங்கம் நாட்டை பொருளாதார ரீதியாக பலப்படுத்தும் முடிவுகளை எடுக்கும்போது, சக்திவாய்ந்த நாடுகள் தலைவர்களை மாற்றவும் ஆட்சியை மாற்றவும் நடவடிக்கை எடுக்கின்றன என்றும் குற்றம் சாட்டினார்.
இவ்வாறான நடவடிக்கைகள் 2015 ஆம் ஆண்டிலும் இடம்பெற்றன என தெரிவித்த அவர், இலங்கை போன்ற நாடுகள் வளர்ச்சியடைவதை சக்திவாய்ந்த நாடுகள் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் அப்போதைய பிரேமதாச அரசாங்கம்தான் ஒரு தனி மாகாணத்தை உருவாக்க விடுதலைப் புலிகளுக்கு பணம் மற்றும் ஆயுதங்களை வழங்கியது என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|