பிரிவினையை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் கூட்டு இணக்கப்பாட்டுடன் செயற்படுங்கள் – பெப்ரல் அமைப்பு வலியுறுத்து!
Thursday, July 14th, 2022நாட்டின் அனைத்து கட்சித் தலைவர்களுக்கம் பெப்ரல் அமைப்பு முக்கிய வேண்டுகோள் ஒன்று விடுத்துள்ளது.
அத்துடன் இது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது –
பிரிவினையை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் கூட்டு இணக்கப்பாட்டுடன் அதிபர் மற்றும் பிரதமர்களை தெரிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
நேற்றையதினம் கொழும்பில் பிரதமர் அலுவலகத்தை பல்லாயிரக்கணக்கான போராட்டக்கார்கள் இணைந்து முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டனர்.
அதன்போது போராட்டக்காரர்களை விரட்டியடிப்பதற்காக ஆயுதம் தாங்கிய படையினரும் காவல்துறையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டு போராட்டக்காரர் மீது துப்பாக்கி பிரயோகம், நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் என்பன மேற்கொள்ளப்பட்டது.
அதனையடுத்து போராட்டக்காரர்களுக்கும் படையினர் காவல்துறையினருக்கும் இடையில் மோதல் தீவிரமடைந்தது. இதனையடுத்து காவல்துறையிரின் தடுப்புக்களையும் மீறி போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றினர்.
இவ்வாறு இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது கண்ணீர் புகை தாக்குதலுக்குள்ளான இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையிலேயே பெப்ரல் அமைப்பு இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|