பிரித்தானிய பெண்ணுக்கு நஷ்டஈடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

2014ஆம் ஆண்டு கட்டுநாயக்கா பொலிசாரினால் புத்தபிரானின் உருவத்தை கையின் மேற்பகுதியில் பச்சைகுத்தியதன் பெயரில் பிரித்தானிய பெண் சுற்றுலாப்பயணி ஒருவர் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டிருந்தார்
குறித்த பிரித்தானிய சுற்றுலாப்பயணிக்கு நஷ்டஈடாக 8 இலட்சம் ரூபாவை வழங்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நயோமி கொலமன் என்பவருக்கே இந்த நஷ்ட ஈட்டுத்தொகையுடன் வழக்கு தொகையும் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் குறித்த சுற்றுலாப்பயணியை கைதுசெய்து தடுத்துவைப்பதில் ஈடுபட்டிருந்து பொலிசாருக்கு தலா 50 ஆயிரம் ரூபா வீதம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பெண் சுற்றுலாபயணியான இவர் பொலிசாரின் இந்த நடவடிக்கைக்கு பின்னர் நீதிமன்ற உத்தரவின் பெயரில் நாடு கடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நாடுகடுத்தப்பட்ட இப்பெண்ணுக்கே நஷ்டஈடுவழங்குவதற்காக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Related posts:
|
|