பிரான்ஸ்ஸிலிருந்து வருகிறது டெங்கு தடுப்பூசி !

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி பெற்ற, டெங்கு நோயர்களுக்காக பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி, இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் உற்பத்தியான இந்தத் தடுப்பூசியை பரிசோதனை செய்த பின்னர், அதன் அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு, மருந்தக ஒழுங்குமுறை ஆணையகத்தின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்தத் தடுப்பூசியை, இலங்கைக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான, இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரிருடன் ஏற்கெனவே கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை - இந்தியாவுக்கு இடையில் புதிய விமான சேவைகள்!
பலாலியில் இருந்து இந்தியாவிற்கான விமான சேவை!
தபாலகங்கள் அனைத்தும் நாளைமறுதினம் மூடப்படும் - தபால் திணைக்களம் அறிவிப்பு!
|
|