பிரதேச செயலகப்பிரிவில் தொழில் தேடுவோர் விபரங்கள் சேகரிப்பு!

Thursday, March 21st, 2019

யாழ். மாவட்ட செயலகத்தின் மாவட்ட தொழில் நிலையத்தினால் தொழில் தேடுவோர் மற்றும் தொழில் வாய்ப்பு அற்றோரை கிராம அலுவலர் பிரிவு ரீதியாக பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இம்மாவட்ட தொழில் நிலையமும் தெல்லிப்பழை பிரதேச செயலகமும் இணைந்து ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் தொழில் வாய்ப்பற்றிருக்கும் இளைஞர், யுவதிகளின் விபரங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும் ஒவ்வொரு கிராம அலுவலகர் அலுவலகத்திலும் இடம் பெறவுள்ளது.

இவ்விடங்களில் பதிவு செய்யும் இளைஞர் யுவதிகளுக்கு அரச தனியார் துறைகளில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தல், தொழிற்பயிற்சிக்கான வாய்ப்பினைப்பெற்றுக்கொடுத்தல், சுய தொழில் முயற்சிகளை வழிவகை செய்தல், பரீட்சைகளுக்கான வழிகாட்டல் செயலமர்வுகளை ஏற்பாடு செய்தல், உயர் கல்வி வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தல், தொழில் வழிகாட்டல் ஆலோசனை வழங்குதல், தொழில் வெற்றிடங்கள் தொடர்பில் தகவல்களை வழங்குதல் மற்றும் உளவியல் ஆய்வினூடாக தனித்திறமைகளை வெளிக்கொண்டு வருதல் ஆகிய சேவைகள் வழங்கப்படவுள்ளன.

இப்பதவி நடவடிக்கையில் தமது கிராம அலுவலர் பிரிவில் நடைபெறும் போது தொழிலற்று இருக்கும் இளைஞர் யுவதிகள் தமது விபரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: