பிரதமரின் தலைமையில் தேசிய மூலோபாய விருது வழங்கும் விழா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது!

Thursday, March 24th, 2022

தேசிய பணி மூலோபாய விருது வழங்கும் விழா – 2022 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றையதினம் ஷங்கிரில்லா ஹோட்டலில் நடைபெற்றது.

உள்ளூர் விநியோகத்துறையில் சிறந்த பணியாற்றும் இலங்கை மூலோபாய மற்றும் சர்வதேச சரக்கு அனுப்புவோர் சங்கம் (SLFFA) அத்துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய பங்குதாரர்களை அங்கீகரித்து ஒரு துறை என்ற ரீதியில் அந்த சாதனைகளை கொண்டாடும் வகையில் இந்த விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட பிரதமரை இலங்கை மூலோபாய மற்றும் சர்வதேச சரக்கு அனுப்புவோர் சங்கத்தின் (SLFFA) தலைவர் திரு.தினேஷ் ஸ்ரீ சந்திரசேகர வரவேற்றார்.

ஆறு பிரதான பிரிவுகளின் கீழ் 40 இற்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டதுடன், ‘லெஜண்ட் ஆஃப் லாஜிஸ்டிக்ஸ்’ விருது பெற்ற மொஹான் பண்டிதகே, ரொஹான் டி சில்வா, கலாநிதி பராக்கிரம திஸாநாயக்க, ஹனிப் யூசுப் மற்றும் டிரோன் ஹோலோ ஆகியோருக்கு கௌரவ பிரதமரினால் விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கை மூலோபாய மற்றும் சர்வதேச சரக்கு அனுப்புவோர் சங்கத்தின் (SLFFA) தலைவர் தினேஷ் ஸ்ரீ சந்திரசேகர மற்றும் சங்கத்தின் (SLFFA) உறுப்பினர்களும் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான வர்த்தமானி இம்மாதம் வெளியாகும் – பல்கலைக்கழக மானியங்கள...
ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் சுதேவ ஹெட்டியாரச்சி மற்றும் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க ஆகிய...
பூநகரியில் 1200 ஏக்கர் நிலத்தில் சூரிய மின்சாரத் திட்டம் – அணை அமைத்து நிலத்தடி நீரை பாதுகாக்கும் தி...