பாழடைந்த வீட்டிலிருந்து சடலம் மீட்பு : யாழில் சம்பவம்!

Wednesday, November 21st, 2018

யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த வீடொன்றில் இருந்து இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடற்தொழிலை மேற்கொள்ளும் கொய்யாத்தோட்ட பகுதியை சேர்ந்த விமலதாஸ் ஜோசப் ஜெபர்சன் (33 வயது) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதி மக்கள் சடலம் தொடர்பில் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே யாழ். பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts: