பால் மா தட்டுப்பாட்டுக்கு தீர்வு – குறையின்றி நாடு முழுவதிலும் ஹைலண்ட் பால் மாவினை விநியோகிக்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் ஹேரத் தெரிவிப்பு!

Tuesday, March 15th, 2022

உள்நாட்டு சந்தையில் நிலவும் பால் மா தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அடுத்த மாத ஆரம்ப பகுதியிலிருந்து குறையின்றி நாடு முழுவதிலும் ஹைலண்ட் பால் மாவினை பகிர்ந்தளிக்க மில்கோ நிறுவனம் தயார் நிலையில் இருப்பதாக, இராஜாங்க அமைச்சர் ரி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் திரவ பால் உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதால் சந்தையில் பால் மாவிற்கு தட்டுப்பாடு நிலவியது.

அடுத்த மாதம்முதல் திரவ பாலையும் பால் மாவையும் சந்தைக்கு விநியோகிக்குமாறு தான் மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேனுக பெரேராவுக்கு பணிப்புரை வழங்கியிருப்பதாக இராஜாங்க அமைச்சர் ரி.பி.ஹேரத் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: