பால்மா இறக்குமதி நிறுத்தப்படும் – எச்சரிக்கிறது பால்மா இறக்குமதியாளர் சங்கம்!

பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படாவிடின், எதிர்வரும் காலங்களில் பால்மா இறக்குமதியை நிறுத்த நேரிடுமென்று, பால்மா இறக்குமதியாளர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பால்மா இறக்குமதிகளின் போது, 30 – 40 சதவீம் நட்டம் ஏற்படுவதாகவும், உலக சந்தையில் பால்மா மெற்றிக் தொன்னொன்றின் விலை 3,350 என்றும், இன்னும் சில நாட்களில் அப்பெறுமதி 3,500 ஐ அண்மித்துவிடுமென்றும் தெரிவித்துள்ளனர்.
1Kg பால்மாவிற்கு 170 ரூபாய் வரி செலுத்தப்படுவதாகவும், இலங்கையில் பால்மாவின் வரியை நூற்றுக்கு 40% ஆக குறைத்துள்ளதாகவும், பால்மா இறக்குமதியாளர் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய மேலும் தெரிவித்திருந்தார்.
Related posts:
கணவரிடமிருந்து விடுதலை வேண்டும்-சுசந்திகா
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது தேர்வாவது எப்படி?
கல்லறைகளுக்கு மட்டும் ஒளியேற்றாமல் கனவுகளை சுந்த மக்களுக்காக எமது மண்ணில் நிரந்தர ஒளியையும் ஏற்றவேண்...
|
|