பாலியல் கல்வி குறித்து ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் நிகழ்வு இந்த வருடம் முதல் நடைமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Tuesday, May 2nd, 2023

பாடசாலை மாணவர்களுக்கான பாலியல் கல்வி தொடர்பாக, ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் நிகழ்வு இந்த வருடத்திலிருந்து தேசிய கல்வியியற் கல்லூரிகளில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

முன்பள்ளி பருவத்திலிருந்து பாலியல் கல்வி வழங்கப்பட வேண்டும் என சிறுவர்களுக்கான நாடாளுமன்ற குழு பரிந்துரைத்திருந்ததாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாலியல் கல்வி தொடர்பான பாடத் திட்டம் உள்ள புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ள போதிலும், அது தொடர்பில் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க விசேட பயிற்சிகளை வழங்குவதற்கு, அவசியம் ஏற்பட்டுள்ளதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

000

Related posts: