பான் கீ மூன் எதிர்வரும் 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயம்!

Sunday, August 21st, 2016

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் எதிர்வரும் 2ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் தற்போதைய நிலைமைகளை நேரில் கண்காணித்துக் கொள்ள அவர் இந்த பயணத்தை மேற்கொள்வதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை பான் கீ மூன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்

Related posts: