பாதுகாப்புக்கு அவசியமான காணிகளை விட முடியாது – பாதுகாப்புச் செயலர்

Thursday, March 24th, 2016
குடாநாட்டில் தேசிய பாதுகாப்புக்கு அவசியமான காணிகள் உரிமையாளர்களிடம் வழங்கப்படமாட்டாது என்று இலங்கை பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கை பாதுகாப்பு அமைச்சில் நேற்று(23) நடத்திய செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது –
”யாழ்ப்பாண மாவட்டத்தில் பல காணித்துண்டுகள் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்படமாட்டாது. அந்தக் காணிகள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அவசியமானவை என்று கருதப்படுகின்றன. யாழ். மாவட்டத்தில் 5700 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தேசிய பாதுகாப்புக்காக அரசாங்கம் எடுத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ள காணிகளுக்கு அதிகளவு இழப்பீடு வழங்கப்படும். இதுதொடர்பாக மாகாணசபை மற்றும் மாவட்டச் செயலாளருடன் பேச்சுக்கள் நடத்தப்படுகின்றன.இராணுவத் தேவைக்கு எவ்வளவு நிலம் தேவை என்றும் நாம் இப்போது கணிப்பிட்டு வருகிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:

சாரதி அனுமதிப்பத்திரம் பெறவந்தவர்களில் அதிகமானோர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டமை கண்டறிவு - சிரேஷ்...
70 ஆயிரம் குடும்பங்களுக்கு பால்மா - தேசிய கூட்டுப் பொறிமுறை ஊடாக 174 மில்லியன் பெற்றுக் கொடுக்க பொன்...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம...