பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உடனடி வசதிகளை செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை.

Wednesday, June 1st, 2016

மண் சரிவினால் பாதிப்புக்குள்ளான கோகாலை மாவட்ட மக்களுக்கு உடனடியாக மீண்டும் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஆலோசானை வழங்கியுள்ளார்.

கேகாலை நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். இதன் போது அனர்த்த முகாமைத்துவ, வீடு, கல்வி, மற்றும் சுகாதார துறை போன்ற அமைச்சர்களுடன் மாவட்ட அரசாங்க அதிபர்களும் கலந்து கொண்டனர்.

Related posts: