பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடங்கள்! – அமைச்சர் சஜித்

இயற்கைச் சீற்றம் காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று விசேட உரையொன்றை நிகழ்த்திய போது அமைச்சர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சஜித் பிரேமதாச,
இயற்கைச் சீற்றம் காரணமாக பல்வேறு வகையான அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணங்கள் வழங்கப்படும்.வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகளும், சேதமடைந்த வீடுகள் திருத்தியும் கொடுக்கப்படும்.
இதன் போது அவர்களின் பொருளாதார பின்புலம் மற்றும் ஏனைய எந்தவொரு விடயமும் கவனத்திற்கொள்ளப்பட மாட்டாது.
மண்சரிவு காரணமாக வசிப்பிடங்களை இழந்தவர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டு, அவர்கள் தங்கள் வீடுகளைக் கட்டிக் கொள்வதற்கும் உதவிகள் வழங்கப்படும்.
எந்தவொரு நபரும் இதன் போது கைவிடப்பட மாட்டார்கள் என்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|