பாடசாலை மூலம் தடுப்பூசியைப் பெற முடியாத மாணவர்கள் வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்ள முடியும் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Sunday, October 24th, 2021

பாடசாலை மூலம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாத மாணவர்களுக்கு வைத்தியசாலைகளின் ஊடாக தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

தடுப்பூசித் திட்டத்துக்கு அமைய 16 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பாடசாலைகளின் ஊடாக தடுப்பூசி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் பாடசாலைகளில் தடுப்பூசியைப் பெற முடியாத மாணவர்கள், வார இறுதி நாட்களில் வைத்தியசாலைகளுக்குச் சென்று தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகமான விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாதுகாப்பான முறையில் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது முக்கியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: