பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவு – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நடவடிக்கை!

பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவை வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
பெற்றோர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட வேண்டும் என்று தானும் உறுதியாக இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வித்துறையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு, முறையான நடைமுறைகள் இன்மையே முக்கிய காரணம் ஆகும்.
கல்வித்துறையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்திய மீனவர்கள் 8 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது!
தெற்கின் பாடசாலைகளில் தமிழ் மொழி கற்பிப்பது மிக சாத்தியமானதாக்கப்பட்டது போன்று வடக்கு மாணவர்களுக்கும...
சிறுவர்களுக்கு நிகழும் துஷ்பிரயோகங்களை தடுக்க ஒருபோதும் தயங்க வேண்டாம் - நாட்டு மக்களிடம் பிரதமர் வல...
|
|