பாடசாலை மாணவர்களுக்கான சீருடை, வவுச்சர், பாடப் புத்தகங்கள் – கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர்!

Monday, December 30th, 2019

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை, வவுச்சர் மற்றும் பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி நிறைவு செய்யப்படவிருப்பதாக கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வலய மட்டத்தின் அடிப்படையில் பாடப்புத்தக்கங்கள் தற்சமயம் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.

Related posts:

தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக சீன அதிபருக்கு மடல் அனுப்பியுள்ள இலங்கையின் அரச தலைவர் !
அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் எதிர்வரும் வாரம்முதல் மீள ஆரம்பிக்க நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் தி...
அனைத்து திரிபடைந்த கொரோனான வைரஸ்களினாலும் ஏற்படும் மரணங்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் தடுப்பூசிக்கு உண...