பாடசாலை மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த நடவடிக்கை!

Wednesday, April 26th, 2017

நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த கல்வி அமைச்சு தயாராகிவருகிறது. இதற்காக 1ம் 2ம் வகுப்புகளுக்கு ஆங்கில பாடப்புத்தகத்தை அறிமுகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சையில் சிறப்பு தேர்ச்சி பெற்ற உயர்தரத்தில் கற்பதற்காக தேசிய பாடசாலைகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சில பாடசாhலைகள் நேர்முகப் பரீட்சையை தற்சமயம் நடத்தி வருவதோடுஇ வேறு சில தேசிய பாடசாலைகள் இன்று ஆரம்பமாகும். புதிய தவணையுடன் நேர்முகப் பரீட்சையை நடத்த தயாராவதாக கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் ஜயந்த விக்ரமநாயக்க நேற்று  தெரிவித்தார். தேசிய பாடசாலைகளில் உயர்தரத்தில் கற்பதற்காக எதிர்வரும் ஜுன் மாதத்தில் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்

Related posts: