பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி அடுத்த வாரம் ஆரம்பம்!

Tuesday, July 6th, 2021

கொவிட் தடுப்பூசி அடுத்த வாரம் தொடக்கம் அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் ஆசிரியர்களுக்கான தடுப்பூசி போடும் பணி அடுத்த வாரம் ஆரம்பமாகும் எனவும் பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கும் முன் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒவ்வோர் ஆசிரியருக்கும் தடுப்பூசி போடுவதற்கான முறையான திட்டத்தை நாம் உருவாக்கி வருகின்றோம். இந்நாட்டில் சுமார் 2 இலட்சத்து 42,ஆயிரம்  ஆசிரியர்கள் உள்ளனர்.

அடுத்த தவணை ஆரம்பிக்க முன் அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என நாம் நம்புகிறோம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிழப்பிடத்தக்கது.

Related posts: