பாடசாலையில் குண்டு வெடிப்பு : முல்லைத்தீவில்  8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

Tuesday, July 18th, 2017

முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் அமைந்துள்ள சிங்கள மகா வித்தியாலையத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் அப் பாடசாலையில் கல்விபயிலும் 8 மாணவர்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பாடசாலை வளவினுள் உள்ள குப்பை மேடு ஒன்றுக்கு நெருப்பு வைத்த சந்தர்ப்பத்திலேயே குறித்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

“டைனமைட்” ரக வெடிபொருள் வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கும் முல்லைத்தீவு பொலிஸார் வெடிப்புச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: